இன்றைய ராசி பலன் 30 ஏப்ரல் 2023

இன்றைய ராசி பலன் 30 ஏப்ரல் 2023

இன்று, ஏப்ரல் 30, ஞாயிற்றுக் கிழமை, சந்திரனின் சஞ்சாரம் நாள் முழுவதும் சிம்ம ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்து இன்றைய சூழ்நிலையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கைக்கு இனிமையான நாளாக இருக்கும். அதேசமயம் இன்று சூரியன், குரு, புதன் மேஷத்தில் சஞ்சரிக்கிறார்.

மேஷம்

மேஷம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வேலைகளில் பிறரின் உதவியும் கிடைக்கும். சமயப் பணிகளில் உங்கள் செயல்பாட்டால் உங்கள் புகழ் உயரும். உங்களின் உடன்பிறந்தவர்கள் யாரேனும் வெளிநாட்டில் வசித்திருந்தால், அவர்களை இன்று சந்திக்கலாம். உடன்பிறந்தவர்களுடன் உறவு வலுப்படும்.

​சந்திர கிரகணம் 2023:5 கண்டங்களில் தெளிவாக தெரியும்? பகுதி சந்திர கிரகணம் எப்போது, கிரகண நேரம் முழு விபரம் இதோ

ரிஷபம்

ரிஷபம்

ஆடம்பரமான சூழலை அனுபவிப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் சிறந்த வெற்றி பெறுவார்கள். வியாபாரம் சம்பந்தமாக சில பயணங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சனி வக்ர பெயர்ச்சி 2023 : 5 ராசிக்கு மலை போல் குவிய உள்ள தொல்லை... இதில் எச்சரிக்கை அவசியம்

மிதுனம்

மிதுனம்

நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு சாதக நாள். எதிர்காலத்தில் அதன் முழு பலனையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்க நிலை இருக்கும். மனம் திறந்து பேசுவதன் மூலம் குடும்பத்தில் நல்லுறவு அதிகரிக்கும். தெளிவு உண்டாகும். பணி நிமித்தமாக மேலதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும்.

குழந்தையின்மைக்கான தீர்வு : இந்த ஜோதிட விஷயங்கள் கவனித்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும

கடகம்

கடகம்

உங்கள் நிதி நிலையும் இன்று நன்றாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர் உங்களுக்காக ஒரு ஆச்சரியப்படுத்த திட்டமிடலாம். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழி அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமையாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

பணியிடத்தில் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம். மாலை நேரத்தை நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன் வாங்கி அனுபவிப்பீர்கள். உங்கள் பேச்சின் இனிமையால் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

எந்த ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக் கூடாது? எப்போது கல்யாணம் செய்யக்கூடாது?

கன்னி

கன்னி

நீங்கள் தலைமைத்துவ திறனை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை முன்னேறுவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்.
காதலில் மன வலியைத் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் செயல், சிந்தனையில் கவனம் தேவை.

துலாம்

துலாம்

திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். அனைத்து பொறுப்புகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். இழுபறியான நிலையில் பண வரவு கிடைக்கும். பயணங்கள் சாதகமாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று நீங்கள் உங்கள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையைப் பேணவும். தந்தையின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளவும். மனதளவில் இருந்த குழப்பம் தீரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களும், நல்ல லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் சாதக நிலை இருக்கும்.

தனுசு

தனுசு

குடும்பத்தின் பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கடின உழைப்புக்கு பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மேன்மை அடைவீர்கள். எதிர்பாராத சில பயணம் செய்ய வேண்டியது இருக்கும். உத்தியோகத்தில் மேன்மை இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

மகரம்

உத்தியோகத்தில் மேன்மையும், புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில், வாடிக்கையாளர்களிடமும் கவனமாக, அனுசரித்து நடக்கவும். வழக்கு விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாலையில் குடும்ப உறுப்பினர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

கும்பம்

தொழில், வியாபாரம் சார்ந்த அலைச்சல் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

அரசு சார்ந்த வேலையில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்

மீனம்

வெளியூர், வெளிநாடு சார்ந்த வேலை, வியாபாரத்தில் லாபம், வெற்றி கிடைக்கும். உடன் இருப்பவர்களின் மனம் அறிந்து செயல்படவும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பணிகளில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். குழந்தைகளின் செயல் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.