மூன்று வேட்பாளர்களை கைது செய்த பொலிஸார்! வெளியானது காரணம்

மூன்று வேட்பாளர்களை கைது செய்த பொலிஸார்! வெளியானது காரணம்

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவர்களை தவிர மேலும் 207 பேர் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் சம்பந்தமான 147 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 47 முறைப்பாடுகள் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யக் கூடிய முறைப்பாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜாலிய சேனரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையெ சட்டவிரோத தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 60 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, இவற்றில் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு வாகனங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.