பிறக்கவிருக்கும் சோபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்க போகுது? அதிலும் குறிப்பாக ராஜயோகத்தை பெற போகும் அந்த 4 ராசிக்காரர்கள் யார் யார்?

பிறக்கவிருக்கும் சோபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்க போகுது? அதிலும் குறிப்பாக ராஜயோகத்தை பெற போகும் அந்த 4 ராசிக்காரர்கள் யார் யார்?

பிறக்கக்கூடிய தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் நல்லபடியாக இருக்கட்டும். எல்லா ராசிக்காரர்களுக்குமே இந்த தமிழ் புத்தாண்டு நன்மை தரக்கூடிய புத்தாண்டாகத்தான் அமையும். இருந்தாலும் நேரமும் காலமும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை அல்லவா. உங்கள் ராசியின்படி உங்களுடைய இந்த தமிழ் வருட பிறப்பு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர்கள் சில விஷயங்களை கணித்து சொல்லி இருக்கிறார்கள். அதைப்பற்றிய பொதுவான ஒரு ராசிபலனை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வருடம் எப்படி அமையப்போகிறது. குறிப்பாக இந்த 12 ராசியில் ராஜ யோகத்தை பெறப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றிய விரிவான பதிவு இதோ உங்களுக்காக. முதலில் அந்த 3 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பார்த்து விடுவோம். தனுசு, மிதுனம், துலாம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த சோபக்கிருது ஆண்டு மிகப் பெரிய பொக்கிஷத்தை உள்ளே மறைத்து வைத்துக் கொண்டு பிறக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது, எதிர்பாராத நல்லது என்று யோகங்கள் அடுத்தடுத்து உங்களுக்கு நடத்திக் கொண்டே இருக்கும். சரி, வாங்க 12 ராசிகளுக்கும் சேர்த்து இந்த வருடம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்து விடுவோம். -

மேஷம் (Tamil new year rasi palan 2023 Mesham) மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு நிறைய மாற்றங்களை கொண்டு வரப் போகின்றது. நீங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும், இனி வரக்கூடிய வாழ்நாளில் வாழக்கூடிய வாழ்க்கைக்கும், நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கும். முன்னேற்றமான மாற்றங்கள் தான். எதிலும் வீழ்ச்சி கிடையாது. உங்களுடைய கனவுகள் நினைவாவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைப்பட்டு வந்த திருமணங்கள் சீக்கிரம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு சீக்கிரமே நல்ல செய்தி உண்டு.

ரிஷபம் (Tamil new year rasi palan 2023 Rishabam) ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் நிறைய நன்மைகளை கொடுத்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூடவே சேர்த்து கொடுக்கப் போகின்றது. பயப்பட வேண்டாம். பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும். குறிப்பாக உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக முதுகு வலி பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதை கவனிக்காமல் விட வேண்டாம். மற்றபடி நீங்கள் செய்யும் தொழில், செய்யும் வேலை குடும்பம் எல்லாவற்றிலும் சிறப்பான பலன்களை உங்களுக்கு கிடைக்கும்.

மிதுனம் (Tamil puthandu rasi palan 2023 Mithunam) மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் நிறைய நன்மைகளை செய்யும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. சில பேருக்கு ராஜ யோகம் அடிக்கும் அளவிற்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். அடிச்சதுடா ஜாக்பாட் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல நீங்களே நினைக்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் குடும்பத்தில் நடக்கப் போகின்றது. பெயர் புகழ் அந்தஸ்து பதவி என்று நீங்கள் கேட்காமலேயே உங்கள் வீடு தேடி வரும். சந்தோஷம் பல மடங்கு பெருகும்.

கடகம் (Tamil new year rasi palan 2023 kadagam) கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத லாபங்கள் வந்து குவியும். சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. உறவுகள் எல்லோரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சொத்து பிரச்சனை தீர்ந்து கைக்கு பெரிய தொகை வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம் (Tamil puthandu rasi palan 2023 Simmam) சிம்ம ராசி காரர்களுக்கு இந்த வருடம் சொல்லாத நல்லது எல்லாம் நடக்கும். நீங்கள் தவறாக ஏதாவது ஒரு காரியத்தை செய்து விட்டால் கூட அது உங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். அமோகமான அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய வருடம் தான் இந்த வருடம். பெயர் புகழ் பாராட்டு என்று ஒவ்வொன்றாக உங்களைத் தேடி வரும். உங்களை விட்டு பிரிந்து போனவர்கள் எல்லாம் மீண்டும் உங்களோடு வந்து சேருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து இனி வரக்கூடிய காலத்தை சந்தோஷமாக வாழ போகிறீர்கள்.

கன்னி (Tamil new year rasi palan 2023 Kanni) கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த வருடம் எதிர்பாராத வகையில் நிறைய நல்லது நடக்க போகிறது. அது எந்த ரூபத்தில் வேண்டும் என்றாலும் உங்களுக்கு வாய்ப்பு வரலாம். பண பிரச்சனை இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். நீண்ட நாட்களாக மீள முடியாமல் துன்பத்தில் இருந்தவர்கள் கூட தங்களுடைய பிரச்சினையில் இருந்து வெளிவந்து விடுவார்கள். சந்தோஷத்தின் உச்ச கட்டத்திற்கு செல்ல போகிறீர்கள்.

துலாம் (Tamil puthandu rasi palan 2023 Thulam) துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அற்புதமான வருடமாக இருக்கப் போகின்றது. புதியதாக வீடு வண்டி வாகனம் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் தங்களுக்கு மனதிற்கு பிடித்த பொருட்களை எல்லாம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர போகிறீர்கள். எதிரி பிரச்சினையில் இருந்து வெளிவர போகிறீர்கள். உங்களால் அடுத்தவர்களுக்கு உதவும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் பெருகும்.

விருச்சிகம் விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வருடம் நல்ல வருடமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். இருந்தாலும் எல்லா விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மாதத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சரிவுகளை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கண் கொத்தி பார்ப்பாக சுற்றி இருக்கும் விஷயங்களை கவனிக்க வேண்டும். அவ்வளவு தான் குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்காக அதிகரிக்கும்.

தனுசு (Tamil new year rasi palan 2023 Dhanusu) தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் நிறைய நற்பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றது. நீங்கள் நினைத்ததை எல்லாம் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலை தேடலாம். புதிய வீடு கட்டலாம். திருமணம் செய்து கொள்ளலாம். 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வதற்கு உண்டான அனைத்து அம்சங்களும் உங்களுக்கு நிறைந்து இருக்கிறது.

மகரம் (Tamil puthandu rasi palan 2023 Magaram) மகர ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உங்களுடைய ஓய்வு நேரம் குறையும். அதாவது வேலை வலு அதிகமாக இருக்கப் போகின்றது. அடுத்தடுத்து வேலைகள் வந்து உங்களை பிசியாகவே வைத்துக் கொள்ளும். உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படும். எதற்கும் கலங்காமல் அயராது உழைத்தால் இந்த வருட பிறப்பு உங்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்கும்.

கும்பம் (Tamil new year rasi palan 2023 Kumbam) கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் எல்லா தடை கற்களும் உடைக்கப்பட்டு படி கற்களாக மாறும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும். உங்களுடைய குடும்பத்தோடு இனி சந்தோஷமாக வாழலாம். வெளியூரில் இருந்தவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் பிரச்சனை குறையும். வியாபாரம் படிப்படியாக முன்னேற்றத்தை அடையும்.

மீனம் (Tamil puthandu rasi palan 2023 Meenam) மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் செல்வ கடாட்சம் நிறைந்த வருடமாக இருக்கப் போகின்றது. உங்கள் கையை விட்டு போன பணமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உங்கள் கைக்கு வந்து விடும். சில நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த மாற்றங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய மாற்றங்கள் தான். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்‌. அரசு வேலையை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியம் மேம்படும். இவை அனைத்து பொதுப்படையாக சொல்லப்பட்டுள்ள ஜோதிட பலன்கள் தான். இது தவிர உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தின் அடிப்படையில் தான் உங்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை முழுமையாக கணிக்க முடியும். அனைவருக்கும் அந்த ஆண்டவனின் அனுகிரகம், இந்த வருடம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.