தேர்தல் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது
உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.
தேர்தல் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையே விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலை கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
எனினும், அதற்கு தேவையான நிதி கிடைக்காமை காரணமாக குறித்த தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.
எவ்வாறாயினும், திட்டமிட்ட வகையில் அன்றைய தினமும் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்திருந்தார்.