ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இன்று

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இன்று

இலங்கையும் பங்கேற்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை இந்தியா இன்று நடத்துகிறது.
 

டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த அமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமைத்துவம் வகிக்கிறது.

இதற்கமைய, அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இந்த கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது 2001 இல் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

இது இந்தியா, சீனா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது.

இதில் ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மொங்கோலியா ஆகிய நான்கு கண்காணிப்பு நாடுகள் உள்ளன.

அத்துடன் உரையாடல் பங்காளிகளாக - ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் துருக்கி ஆகியன செயற்படுகின்றன.