நியூசிலாந்து அணி அபார வெற்றி

நியூசிலாந்து அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதனடிப்படையில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்ப்பில் பின் ஆலன் 51 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரன் 49 ஓட்டங்களையும், டாரில் மிட்செல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சமிக கருணாரத்ன 4 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்ப்பில் ஹென்ரி செப்லி 5 விக்கெட்களையும் டாரில் மிட்செல் மற்றும் டிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.