செய்தி தவறானது - தனஞ்சய அதிரடி அறிவிப்பு!

செய்தி தவறானது - தனஞ்சய அதிரடி அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியில் 7 ஆவதாக களம் இறங்க மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை அணியின் வீரர் தனஞ்சய டி சில்வா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ´´நாளைய போட்டியில் நான் 7 ஆவதாக களம் இறங்க மறுத்துவிட்டேன் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது, நான் எப்போதும் அணியுடன் நிற்கும் வீரர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்´´ என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (25) ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.