உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது.

அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

ரஷ்ய - யுக்ரைன் மோதலால் உயர்ந்து வந்த மசகு எண்ணெய் விலை, 2021 ஆம் ஆண்டுக்கு பின், இத்தகைய அளவுக்கு சரிந்துள்ளது.

மோதலின் ஆரம்ப காலத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.