நியூசிலாந்து அணி 373 ஓட்டங்கள்

நியூசிலாந்து அணி 373 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் நடைபெற்று வருகிறது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றனர். 

இந்த போட்டியின் போது அஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 7,000 ஓட்டங்களைக் கடந்த இலங்கையின் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கினார். 

தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்றது. 

நியூசிலாந்து அணி சார்பாக Darly Mitchell 102 ஓட்டங்களையும் Matt Henry 72 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அசித்த பெர்ணான்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 76 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.