3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ
டெல்லியில் இன்று காலை 3 மணி நேரம் கனமழை பெய்தது. இந்த 3 மணி நேர மழையால் டெல்லி நகரமே வெள்ளத்தால் ஸ்தம்பித்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. ஆங்காங்கே மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் வெள்ளம் அப்படியே தேங்கி நின்றன.
காலையில் எழுந்த மக்கள் மழை வெள்ளம் சூழ்நிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 3 மணி நேர மழையைக் கூட டெல்லியால் தாக்குப்பிடிக்க முடியவில்லையே, என்று அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், ‘‘கொரோனா நேரத்தில் அரசியல் செய்வதற்கு இது நேரம் அல்ல’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு பகீர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், வீடுகள் அதிகமாக உள்ள இடம் ஒன்றில் மழை வெள்ளம் ஆற்று நீர் போன்று கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது திடீரென கால்வாயின் மையப்பகுதியில் திடீரென மர்ம பள்ளம் உண்டாகி தண்ணீர் அதற்குள் செல்கிறது. அந்த பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து அருகில் உள்ள வீட்டின் அடிப்பகுதியை அரித்துச் செல்கிறது. அதன்பின் அந்த வீடு அப்படியே பள்ளத்திற்குள் சரிந்து விழுகிறது.
இந்த பகீர் காட்டிசியை ஒருவர் வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
दिल्ली के आईटीओ के पास अन्ना नगर में पानी में कई मकान बह गए ,बारिश के पहले न नाले साफ हुए सीवर,इसलिए ये हाल है,राजधानी की इससे बदतर हालत क्या हो सकती है pic.twitter.com/Oq66qV7xD7
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) July 19, 2020