துருக்கி மற்றும் சிரியா மரண எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது

துருக்கி மற்றும் சிரியா மரண எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
 

துருக்கியில் 44 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், சிரியாவில் 5 ஆயிரத்து 900 இற்கும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


கடந்த 6 ஆம் திகதி, துருக்கி மற்றும் சிரியாவில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில், சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


துருக்கியில், ஒரு இலட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.


5 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.