நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சி முறியடிப்பு!

நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சி முறியடிப்பு!

சட்டவிரோத கடத்தல் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்ட 68 இந்திய நட்சத்திர ஆமைகளை மஹாராஸ்டிர மாநில வனத்துறை, அவற்றின் இயற்கையான வாழ்விடத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
 

குறித்த ஆமைகளுக்கு புனேவில் உள்ள ரெஸ்க்யூ என்.ஜி.ஓ. அமைப்பின் ஊடாக சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு, வெளிவராத முடியாத இடத்திற்கு விடுவிக்கப்பட்டது.
 

இந்த இனம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த வகை நட்சத்திர ஆமைகள் வறண்ட பகுதிகள் மற்றும் புதர்க்காடுகளில் வாழ்கின்றன.
 

கடந்த 2016 முதல் IUCN சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய விலங்கினமான சேர்க்கப்பட்டுள்ளது.
 

பெரிய அளவிலான கடத்தல் காரணமாக நட்சத்திர ஆமைகளின் தொகை அரிதாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

2022 முதல் காலாண்டில் இருந்து, புனே, சோலாப்பூர், கோலாப்பூர், நாசிக், அலிபாக் மற்றும் மும்பை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 88 இந்திய நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.