
துருக்கியில் மீண்டும் பாரிய நிலநடுக்கம்
துருக்கியின் தெற்கு பகுதியில் நேற்றைய தினம் 6.4 மெக்னிடியுட் அளவில் மற்றுமொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மூவர் பலியானதுடன் துருக்கி மற்றும் சிரியாவில் 680க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அந்த நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.04 அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பல பின்னதிர்வுகள் உணரப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி அங்கு ஏற்பட்ட 7.8 மெக்னிடியுட் அளவிலான நிலஅதிர்வில் துருக்கி மற்றும் சிரியாவில் 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்தநிலையில் நேற்றைய தினம் மற்றுமொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதுடன், ஆபத்தான கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.