அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.