மாவனல்லை பிரதேச சபை தவிசாளர் நொயெல் பதவியிலிருந்து இடைநீக்கம்!

மாவனல்லை பிரதேச சபை தவிசாளர் நொயெல் பதவியிலிருந்து இடைநீக்கம்!

கையூட்டல்பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட மாவனல்லை பிரதேச சபையின் தவிசாளர் நொயெல் தசந்த ஸ்டீபன் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பதில் கடமைகளுக்காக உப தவிசாளருக்கு அதிகாரம் வழங்கி, அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (14) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வெளியிட்டுள்ளார்.

மேலும், தவிசாளர் தமது கடமைகளில் ஏதேனும் தவறுகளை இழைத்துள்ளாரா என்பதை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ரோஹன அனுரகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.