கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைத்து மரணத்தை மறைக்க மத்திய அரசு முயற்சி- ராகுல் குற்றச்சாட்டு
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைத்து மரணத்தை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
ராகுல் காந்தி, தனது ருவிட்டரில் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசின் மாயை விரைவில் உடையும் எனவும் இந்தியா அதற்கான விலையை கொடுக்கும் என்றும் அவர் தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அதாவது, இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 ஆக காணப்படுகின்றது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே ராகுல் காந்தி, மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.