வீதியில் பயணித்த பெண்ணின் தலையில் விழுந்த கம்பம்!

வீதியில் பயணித்த பெண்ணின் தலையில் விழுந்த கம்பம்!

ராகம, மஹர - நுகேகொட வீதி பகுதியில் தொலைபேசி கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பம் ஒன்று தலையில் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ராகம கல்வல சந்தி மஹர - நுகேகொட வீதி பகுதியில் அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ராகமவில் இருந்து கடவத்தை நோக்கி பயணித்த லொறி தொலைபேசி கம்பிகளில் சிக்கியதில் கம்பம் உடைந்து வீதியில் பயணித்த பெண்ணொருவரின் தலையில் விழுந்ததில் அவர் படு காயம் அடைந்துள்ளார்.

இதன்போது நிற்காமல் சென்ற லொறி மேலும் பல தொலைபேசி கம்பிகளில் சிக்கியதுடன் மேலும் 2 கம்பங்கள் வீதியில் சரிந்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 53 வயதுடைய பெண் தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.