70 வயது நபரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சொத்து முழுவதையும் அமுக்கிய பெண்!

70 வயது நபரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சொத்து முழுவதையும் அமுக்கிய பெண்!

இந்தியாவில் மனைவியை இழந்த நபர், இரண்டாம் திருமணம் செய்யவிருந்த நிலையில், அந்த பெண் இவரின் சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளுடன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் Borivli-யில் வசித்து வந்த 70 வயது மதிக்கத்த நபரின் மனைவி, கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

அவ்வப்போது உடல் நிலை சரியில்லாமலும், தனியாகவும் இருந்ததால், அவரின் நண்பர் Dinesh Parik என்பவர் இதை எல்லாம் சமாளிக்க ஒருவர் வேண்டும், அதற்கு திருமணம் தான் நல்ல தீர்வு என்று கூறி, இவரை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார்.

முதலில் மறுத்த அந்த நபர் அதன் பின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து Dinesh Parik அவரிடம் ராஜஸ்தானை சேர்ந்த Aruna Parikh என்ற பெண் ஒருவர் விவகாரத்தாகி திருமணத்திற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். Aruna Parikh-க்கு 21 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுலை 6-ஆம் திகதி Aruna Parikh தன் பெற்றோர், சகோதரர் மற்றும் 21 வயது மகளுடன் மும்பைக்கு வந்துள்ளார்.

மும்பைக்கு வந்த அடுத்த நாள் அவர்கள் Goregaon-வில் உள்ள Arya Samaj அலுவலகத்திற்குச் சென்று அவர்களின் பெயர்களை திருமணத்திற்காக பதிவு செய்துள்ளனர்.

திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்காக இவரை ஜெய்ப்பூருக்கு வரும் படி Aruna Parikh கூறியுள்ளார்.

இதற்கிடையில், Aruna Parikh-ம் அவரது குடும்பத்தினரும் மும்பை நகரத்தை சுற்றிப் பார்க்க விரும்பியதால், அவர்கள் Dinesh Parik வீட்டில் தங்கியுள்ளனர். இதற்காக வீட்டின் ஒரு சாவியை Aruna Parikh-யிடம் அவர் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 8-ஆம் திகதி Aruna Parikh அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 14-ஆம் திகதி, ஜெய்ப்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதவான் அலுவலகத்தில் திருமண பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதன் பின் அவர், ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமமான Sikkar-க்கு சென்றுள்ளார். மேலும் அவருக்கு சொந்தமான சொத்துக்களைக் காண்பிப்பதற்காக Aruna Parikh-யும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து 25-ஆம் திகதி Dinesh Parik மட்டும் மும்பைக்கு திரும்பியுள்ளார். அப்போது Aruna Parikh குடும்பத்தினர் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சொத்து ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் காணமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் உடனடியாக Aruna Parikh மற்றும் அவரது மகளை தொடர்பு கொண்ட போது, எந்த ஒரு பதிலும் இல்லை.

அதன் பின், ஆகஸ்ட் 28-ஆம் திகதி மருமகனுடன் அவர் ஜெய்ப்பூருக்க பறக்க, அவர்கள் குறித்து எந்த ஒரு சரியான தகவலும் இல்லை. இதற்கிடையில், இதயம் தொடர்பான பிரச்சனையால் உடல் நிலை மோசமடைந்ததால், பாதிக்குப்புக்குள்ளான நபர் இது குறித்து புகார் அளிக்காமல், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தற்போது உடல்நிலையில் தேறியுள்ள இவர் மும்பைக்கு திரும்பி இது குறித்து புகார் கொடுக்கவே சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடிச் செல்லப்பட்ட சொத்து ஆவணங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றின் மதிப்பு 28 லட்சம் ரூபாய்க்கு மேல் வரும் என்று அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.