தேர்தல் ஆணைக்குழுவில் விஷேட சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவில் விஷேட சந்திப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் இன்று (24) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு விரிவாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் நேற்று (23) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.