லாஸா வைரஸால் பாதிக்கப்பட்ட 105 பேர் கண்டுபிடிப்பு!

லாஸா வைரஸால் பாதிக்கப்பட்ட 105 பேர் கண்டுபிடிப்பு!

நைஜீரியாவில் லாஸா வைரஸால் பாதிக்கப்பட்ட 105 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் ஜனவரி 2 மற்றும் 15 க்கு இடையில் பதிவாகியுள்ளதுடன், நைஜீரியாவின் 10 மாநிலங்களில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

எலிகள் மூலம் பரவும் எபோலா, மாபர்க் போன்ற கொடிய வைரஸ், நைஜீரியாவின் வடகிழக்கு போனோ மாநிலத்தில் 1969 ஆம் ஆண்டளவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, தசைவலி, நெஞ்சுவலி போன்றவையும் இந்த லாஸா நோயின் அறிகுறிகள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.