உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த பரிந்துரைகளை வழங்க விசேட குழு

உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த பரிந்துரைகளை வழங்க விசேட குழு

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக நாடாளுமன்ற விசேட குழுவிற்கு உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நியமித்துள்ளார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், கலாநிதி சுரேன் ராகவன், கலாநிதி ஹரிணி அமரசூரிய, ரமேஷ் பத்திரன, சீதா அரம்பேபொல, ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்ஷன யாப்பா, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.