முதல்தடவையாக ஒரேநாளில் கால் மில்லியன் தொற்றாளர்கள் பதிவு- உலக சுகாதார அமைப்பு

முதல்தடவையாக ஒரேநாளில் கால் மில்லியன் தொற்றாளர்கள் பதிவு- உலக சுகாதார அமைப்பு

உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஒரேநாளில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கிங்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளை மேற்கொள்காட்டி சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஒரேநாள் பாதிப்பு, கொரோனா தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து இற்றைவரையான காலப்பகுதியில் பதிவான அதிகூடியதும் கால் மில்லியனைத் தாண்டியதுமான எண்ணிக்கை என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன்ஸ் ஹொப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் எண்ணிக்கையின்படி, நேற்று சனிக்கிழமை வரையான காலப்பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 மில்லியனைக் கடந்ததுடன் ஆறு இலட்சத்துக்கும் அதிகமானோர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.