யாழில் கிணறு ஒன்றில் தோண்ட தோண்ட வெளிவரும் பொருமளவான வெடிபொருட்கள்
யாழ்ப்பாணம் - பலாலி, குரும்பசிட்டி தனியார் காணியில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது பொருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் குரும்பசிட்டி அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் உள்ள கிணற்றில் வெடிபொருட்கள் காணப்பட்டன.
இது குறித்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணியில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதுடன், மேலும் வெடிபொருட்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதையடுத்து குறித்த கிணற்றில் அகழ்வுப்பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.