
பிரேசில் வன்முறை - உயர்மட்ட அதிகாரிகளை கைதுசெய்ய உத்தரவு
பிரேசில் தலைநகரில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய அந்த நாட்டு நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்முதற்கட்டதாக அங்கு இடம்பெற்ற வன்முறைகளுக்கு பொறுப்பானவர் என கூறப்படும் இராணுவ காவல்துறையின் முன்னாள் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரேசில் புதிய ஜனாதிபதி லூயிஸ் இனசியா லூலா டி சில்வாவின் வெற்றியை ஏற்க மறுத்த அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பொல்சானாரோவின் ஆதரவாளர்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர்.
உயர் நீதிமன்றம் கட்டடத்தை முற்றுகையிட்டதுடன், ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்தும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, வன்முறைகளில் ஈடுபட்ட ஆயிரத்திற்கு அதிகமானோர் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.