முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க விசேட நடவடிக்கை

முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க விசேட நடவடிக்கை

செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 2 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அமைச்சின் கால்நடை வள பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாதாந்த முட்டை உற்பத்தி, 30 மில்லியனாக குறைவடைந்துள்ளது.

கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அடைகாக்கும் கோழிகளின் வருடாந்த இறக்குமதி 80,000 லிருந்து 40,000 ஆக குறைந்துள்ளமையே இதற்கு காரணமென விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கு தீர்வாக அடைகாக்கும் கோழிகளை இறக்குமதி செய்தால் முட்டை உற்பத்தி 11 மாதங்கள் தாமதமாகும் என்பதால் அதற்கு மாற்றாக செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் மூலம் சோள உற்பத்தியில் 40 வீத வீழ்ச்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக கால்நடை தீவனம் இல்லாததன் காரணமாக கடந்த காலங்களில் முட்டை மற்றும் கோழி உற்பத்தி குறைவடைந்ததாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.