தனுஷ்கவின் கோரிக்கைக்கு கிடைத்த அனுமதி!

தனுஷ்கவின் கோரிக்கைக்கு கிடைத்த அனுமதி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சிட்னி ரயில் நிலையத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தகவல்களைப் பெற சட்ட்த்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க அண்மையில் கைது செய்யப்பட்டு ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை பரிசீலிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.