மெட்டா நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்!

மெட்டா நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்!

மெட்டா நிறுவனம் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெட்டா நிறுவனம் 13 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி வருவதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்புகளை கொண்டதாகும்.

மெட்டா நிறுவனத்தின் இந்த தீர்மானத்தின் மீது தற்போது உலகின் கவனம் திரும்பியுள்ளது.

இது வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான முடிவு என அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.,

தற்போது உலகம் முழுவதும் சுமார் 87,000 மெட்டா பணியாளர்கள் உள்ளனர்.

நிறுவனம் எடுத்த இந்த முடிவால் சுமார் 11,000 ஊழியர்கள் வேலை இழப்பர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன