பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு!

பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் , விடுதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை இன்றைய தினம் (05) அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.