கொழும்பிற்கு வருபவர்களுக்கான அறிவிப்பு

கொழும்பிற்கு வருபவர்களுக்கான அறிவிப்பு

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (02) கொழும்பில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராளிகள் குழுவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேரணி இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய போராட்டத்தில் தமது கட்சி இணைந்து கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணியின் திரு.சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.