அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

சரித் அசலங்க ஆட்டமிழக்காது 38 ஒட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சாரிபில் மார்கஸ் ஸ்டொனிஸ் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

19 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும், கிளேன் மெக்ஸ்வெல் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன மற்றும் மஹீஸ் தீக்‌ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.