அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று (22) இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 89 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பதிவு செய்தது.

அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி சிட்னியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 201 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17.01 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.