சட்டவிரோத சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலி!

சட்டவிரோத சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலி!

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு 20 பேர் தங்கம் வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் திடீரென சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், சுரங்கத்தில் இருந்த 20 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 பேர் சடலமாகவும், 5 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர்.