இன்றைய ராசிபலன் 15.09.2022

இன்றைய ராசிபலன் 15.09.2022

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அனுபவ அறிவை பயன் படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர்ந்து கொள்ளாதீர்கள். உத்தி யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூடப்போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவினங்களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.  பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


கடகம்

கடகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


சிம்மம்

சிம்மம்: இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய சிந்தனைகள் தோன்றும். விருந்தினர் வருகை உண்டு. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதியபாதை தெரியும் நாள்.


கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உறவினர்கள் உதவிகேட்டு தொந்தரவுகள்அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


துலாம்

துலாம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: இன்றைய தினம் சமயோசிதமாகவும் சாதுரியமாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை  அதிகரிப்பீர்கள்.   உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


தனுசு

தனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.


மகரம்

மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை சேர்த்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.


கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்தது நிறைவேறும் நாள்.


மீனம்

மீனம்: கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்கள அவர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.