
போட்டியின் ஆட்டநாயகன் பானுக்க - தொடர் ஆட்டநாயகன் வனிந்து!
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி 6ஆவது முறையாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற பெருமையை இலங்கை அணி பெற்றது.
இன்றைய இறுதிப் போட்டியில் போட்டியின் ஆட்டநாயகனாக பானுக்க ராஜபக்ஷ தெரிவானார்.
பானுக்க ராஜபக்ஷ இன்றைய போட்டியில் அணிக்காக 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 03ஆவது அரைச்சதம் இதுவாகும்.
இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், சிறந்த பிடியெடுப்புக்கான விருது அஷேன் பண்டாரவுக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தொடர் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவானார்.
இவர் இன்றை போட்டியிலும், இலங்கை அணி சார்பில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 21 பந்துகளில் 05 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், பந்துவீச்சில் 04 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.