இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஆசிய கிண்ண தொடரின் சூப்பர் 4 போட்டியில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.