மின்வெட்டு குறித்து வௌியான மகிழ்ச்சியான செய்தி!

மின்வெட்டு குறித்து வௌியான மகிழ்ச்சியான செய்தி!

நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டு தேவைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னக்க, தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த வாரம் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இடம்பெறும் என்று அறிவித்திருந்த போதிலும் அந்த ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படவில்லை. 3ம் திகதியில் இருந்து இன்று வரை மின்வெட்டு இல்லை. அதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. எனவே, மின்வெட்டுக்கு அவசியம் ஏற்படவில்லை. 5ம் திகதி, வழங்கல் அதிகரித்துள்ளது. தேவையான அளவை விட அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் தற்போது உள்ளது. எனவே, இந்த நிலக்கரி பிரச்சினை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு வரவில்லை என்றால் ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது. தேவையான அளவு தண்ணீர் இருந்தால், நிலக்கரி இருந்தால், வரும் டிசம்பர் மாதம் வரை. மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது” என்றார்.