கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: திருப்பதியில் வழிபாட்டை நிறுத்துவதற்கு கோரிக்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: திருப்பதியில் வழிபாட்டை நிறுத்துவதற்கு கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என பொலிஸாரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயம் கடந்த  ஜூன் 8 ஆம் திகதி  முதல் மீண்டும் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டதனை தொடர்ந்து அங்குப் பணிபுரியும் அர்ச்சகர்கள், காவலர்கள் என 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருமலை கூடுதல் பொலிஸ் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

மேலும் பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த திருப்பதி ஏழுமலையான்  ஆலய வளாகம், கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸ் கண்காணிப்பாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.