இன்றைய ராசிபலன் 6.9.2022

இன்றைய ராசிபலன் 6.9.2022

மேஷம்

மேஷம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வரும். பொறுமை தேவைப்படும் நாள்.


மிதுனம்

மிதுனம்: மனைவி வழி உறவினர்களால் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


கடகம்

கடகம்: உறவினர் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


சிம்மம்

சிம்மம்: உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


கன்னி

கன்னி: தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


துலாம்

துலாம்: விருந்தினர் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமாக நாள்.


தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


மகரம்

மகரம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.


கும்பம்

கும்பம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.


மீனம்

மீனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.