இன்றைய ராசிபலன் 29.08.2022

இன்றைய ராசிபலன் 29.08.2022

மேஷம்

மேஷம்: மற்றவர்களை நம்பி இருக்காமல் தன்னால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேற வேண்டும் என்று முடிவுக்கு வருவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும் . நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்ட விரியும். வியாபாரத்தில் புதிய வேலை ஆட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நினைவாகும் நாள்.


மிதுனம்

மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுகொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்து பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். 


சிம்மம்

சிம்மம்: கணவன், மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்


கன்னி

கன்னி:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் விஷயங்களில் திட்டமிட்டது  ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நிதானம் தேவைப்படும் நாள்.


துலாம்

துலாம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சாலைகளை  கவனமாக கடந்து செல்லுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்னை வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்:

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டும் என்று எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்துபிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த
கோரிக்கைகள் நிறைவேற்றும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

தனுசு

தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும்  நாள்.


மகரம்

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன சாதனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


கும்பம்

கும்பம்: சந்திராஷ்டம இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள் மன கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அதிக உரிமையை எடுத்து கொண்டு யாரிடமும் பேசவோ பழகவோ வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


மீனம்

மீனம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் நடப்பார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை நடக்கும் நாள்.