பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்கள் 06 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 858 எனவும், 3,553 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் 1,255 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.