தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும் மருந்துக் கடைகள், வைத்தியசாலைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படவுள்ளது.

காய்கறி, மளிகை கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படவுள்ளன. இந்நிலையில், வாகனங்களில் பயணிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கடந்த மாதம் 19ஆம் திகதி தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கில் ஜூலை மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் ஜூலை மாதம் 5,12,19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இம்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக நாளை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.