இலங்கை அணி 222 ஓட்டங்கள்!

இலங்கை அணி 222 ஓட்டங்கள்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இன்று (16) இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும் மஹீஷ் தீக்‌ஷன 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.