இன்றைய ராசிபலன்7/18/2020

இன்றைய ராசிபலன்7/18/2020

மேஷம்

மேஷம்:  குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கா மல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்க
பாருங்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள் .


மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம்கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும்.  தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பினை ஏற்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.


சிம்மம்

சிம்மம்: சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.


கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத் தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.


துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களின் நட்பை இழக்கவேண்டி இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வேலை சுமை மிகுந்த நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.மனைவி வழியில் நல்ல செய்திஉண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்கநினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.


தனுசு

தனுசு: சமயோசிதமாகவும்  சாமர்த்தியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவரின் நட்பு  கிடைக்கும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.


மகரம்

மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.


கும்பம்

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.  தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


மீனம்

மீனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்  ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.