அதீத இறக்குமதியும், அதீத கொள்வனவும் நாட்டை மேலும் பாதக நிலைக்கு தள்ளும் - மத்திய வங்கி

அதீத இறக்குமதியும், அதீத கொள்வனவும் நாட்டை மேலும் பாதக நிலைக்கு தள்ளும் - மத்திய வங்கி

அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயங்கள் வங்கி கட்டமைப்பில் கிடைக்க செய்வதற்கான அர்ப்பணிப்பை இலங்கை மத்திய வங்கி மீள் உறுதி செய்துள்ளது.

அத்துடன், வர்த்தகர்களின் அதீத இறக்குமதியும், நுகர்வோரின் அதீத கொள்வனவும் நாட்டை மேலும் பாதக நிலைக்கு தள்ளும் என்பதால் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.