அவுஸ்திரேலிய கடலில் இலங்கை படகு மீட்பு

அவுஸ்திரேலிய கடலில் இலங்கை படகு மீட்பு

ஏதிலிகளது படகாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று அவுஸ்திரேலிய கடல் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் ஊடக அறிக்கை ஒன்றின்படி, சட்டவிரோதமான படகு ஒன்று அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முயற்சித்த போது அவதானிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

இந்த படகு இலங்கையில் இருந்து வந்திருப்பதாகவும், அதில் உள்ளவர்களை அவர்கள் பயணத்தை ஆரம்பித்த இடத்துக்கே பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில் இந்த படகு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.