நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு பல்கலைகழக மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி, செத்தம் வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தை உட்பட சில வீதிகளுக்கு பல்கலைகழக மாணவர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல் போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) எதிர்ப்புப் பேரணியானது கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பமானது.