14 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

14 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தற்போது 14 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவ விநியோகப் பிரிவுக்கு தற்போது இரண்டு மருந்துகளை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

´´இதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகள், அறுவை சிகிச்சை கருவிகள், உணவு பொருட்கள் விநியோகித்தவர்களுக்கு 4 மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு 34 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கு 4 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. 14 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்பது வேதனையான உண்மை. அதில் இரண்டு மருந்துகளையேனும் விநியோகிக்க மருத்துவ விநியோகப் பிரிவுக்கு தற்போது இயலுமை இல்லை.