இந்நாள் பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து!
பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் நாட்டின் பிரதமராக பதவியேற்ற புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும், அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் உடனடியாக அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கப்படுவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.