மீண்டும் 16 மணித்தியாலங்களும் ஊரடங்கு சட்டம் அமுல்!

மீண்டும் 16 மணித்தியாலங்களும் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாடு முழுவதும், இன்று பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி, பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லையென ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.

இதன்காரணமாக பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரங்களை நோக்கி பிரவேசித்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது செய்தித் தொடர்பாளர்கள தெரிவித்தனர்.

அதேநேரம், கடந்த மூன்று நாட்களின் பின்னர், எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.