கொவிட்-19: நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பை பதிவுசெய்தது அமெரிக்கா!

கொவிட்-19: நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பை பதிவுசெய்தது அமெரிக்கா!

அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 73,388பேர் பாதிப்படைந்ததோடு 963பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகிலேயே கொவிட்-19 பெருந் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை மொத்தமாக 36இலட்சத்து 95ஆயிரத்து 025பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், மொத்தமாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 41ஆயிரத்து 118பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18இலட்சத்து 74ஆயிரத்து 274பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16ஆயிரத்து 452பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து, 16இலட்சத்து 79ஆயிரத்து 633பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட மாநிலமாக நியூயோர்க் விளங்குகின்றது. அங்கு இதுவரை நான்கு இலட்சத்து 31ஆயிரத்து 380பேர் பாதிப்படைந்துள்ளனர். 32ஆயிரத்து 518பேர் உயிரிழந்துள்ளனர்.